"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் "
என்ற குறளுக்கு முழு அர்த்தம் நம் எல்லாருக்கும் தெரியும்.
அப்போ செய்தொழிலுக்கு ஏற்ப மேல் ,கீழ் என்ற வேற்றுமை
ஏற்புடையதா ? என்ற கேள்வி தொக்கி நிற்கிறது .
இதை ஒரு சிறிய உதாரணத்தினால் நான் புரிந்து கொண்டேன். நமக்கு இரு
கைகள் இருக்கின்றன . வலது கை , இடது கை -இரண்டுமே ஒன்றை ஒன்று ஒக்கும் . ஒன்று இல்லாமல் மற்றொன்று இயங்கும் போது நம்முடைய முழு சக்தியை நம்மால் உபயோகிக்க முடியாது.ஆயினும் வலது கை செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் இடது கையினால் நாம் செய்வதில்லை.
வலது கையினால் செய்வதை மேலானதாக நாம் கருதுகிறோம் இதுதான்
"செய்தொழில் வேற்றுமையான் " என்றார் பொய்யாமொழிப்புலவர் எனத் தெளிந்து கொண்டேன் .