இனி
என் மூச்சுக்காற்று இந்தப்புவியை மாசுபடுத்தாது;
இனி
என் உடல் இந்த பூமியின் வெப்பத்தைக் கூட்டாது;
இனி என்னுடைய
நாற்ற வியர்வை வெளியே கொட்டாது;
இனி நான்
துப்பும் எச்சிலும் தெருவைக் குப்பையாக்காது;
இனி
என் மூத்திரமும் மலஜலமும் அழுக்காக்காது;
இனி
என் இரத்தமும்,விந்துவும் பயன்படாது;
இனி
என் அன்பும்,
பாசமும் உபயோகமாகாது;
இனி என் அகந்தையும், ஆணவமும் அசுத்தப்படுத்தாது;
இனி என்
பெயர் எழுதிய தான்யங்களும் கிடையாது;
இனி
ஒரு துணியும் என்னை மறைக்காது;
இனி எந்தக்
கூரையும் என்னை எதிர்பார்க்கவில்லை;
இனி
தனியொரு தூக்கமும் எனக்கு தேவையில்லை;
இனி
என் எண்ணங்கள்கூட யாரையும் கட்டுப்படுத்தாது;
-ஏன்
இனி நான் விடும் மூச்சுகூட இப்புவியை மாசுபடுத்தாது
No comments:
Post a Comment