‘கோவிட்’-‘மஹா மாரி’யம்மா!!

தீண்டாமை எனும் வியாதி, 
திரும்பி வந்தது ‘கோவிட்’டாய்!, 
‘ரெட்டை டம்ளரை’ வீட்டுக்குள் 
 அழைத்து வந்தது அதிரடியாய்! , 
“தள்ளி நில் தொடாதே”, 
ஆச்சார பாட்டியாய், 
என்னிடம் சமூக இடைவெளி கேட்டது ! 
“கை, கால் அலம்பாமல் 
வீட்டுக்குள் வராதே” 
விரட்டிய அம்மாவை விஞ்சியது! 
‘சோப்பையும் போட்டு 
 கழுவிக்கொண்டே இருந்தால் மட்டுமே 
தலை தப்பித்தாய்’ 
 தாயாய் தனயனைக் கொஞ்சியது!. 
பெரியவரிடம் பேசினால் 
வாயைப் பொத்தி பேசணும்- ஒருபடி 
மேலே சென்று வாயை மூக்கை 
ரெண்டையும் மூடியே 
வைத்து பேசணும்- தீயாய் எச்சரித்து சென்றதம்மா!- அது கண்ணுக்கு தெரியாத ‘மஹா மாரி’யம்மா

No comments:

Post a Comment

Thoughts on GST Council - Heightened Uncertainty & Black Swan Risks

  Considering reciprocal tariff measures, now GOI is compelled to reduce Import duties.However domestic GST reductions are hanging fire for ...