திரும்பி வந்தது ‘கோவிட்’டாய்!,
‘ரெட்டை டம்ளரை’ வீட்டுக்குள்
அழைத்து வந்தது அதிரடியாய்! ,
“தள்ளி நில் தொடாதே”,
ஆச்சார பாட்டியாய்,
என்னிடம் சமூக இடைவெளி கேட்டது !
“கை, கால் அலம்பாமல்
வீட்டுக்குள் வராதே”
விரட்டிய அம்மாவை விஞ்சியது!
‘சோப்பையும் போட்டு
கழுவிக்கொண்டே
இருந்தால் மட்டுமே
தலை தப்பித்தாய்’
தாயாய் தனயனைக் கொஞ்சியது!.
பெரியவரிடம் பேசினால்
வாயைப் பொத்தி பேசணும்-
ஒருபடி
மேலே சென்று
வாயை மூக்கை
ரெண்டையும்
மூடியே
வைத்து பேசணும்-
தீயாய் எச்சரித்து சென்றதம்மா!- அது
கண்ணுக்கு தெரியாத ‘மஹா மாரி’யம்மா