பாரதியார்

புலமைக்கு  ஒருஅணி பாரதியார்;
    புதுமைக்கு   ஒருமுடி பாரதியார்;
புவியினிலே  அவனோர் கவியரசன்;
     புரட்சியிலே அவனோர்  மெய்வீரன் !

ஊறும் மணற்கேணியன்றிவர் பாட்டு!
      பாற் கேணியாமவர் தம் கூற்று!
ஏறின் பீடுநடை தெறிக்கும் கருத்து!
      வீறு கொண்டேழுப்பும் செயலுக்கு!

தேனின்ப மட்டுமன்று தமிழ்ச் செவிக்கு!
        மேனியுள்ளமெங்கும் பரவு அமிழ்து!
ஊனுயிர் ஊட்டும் அவரின் செப்புமொழி!
         வானமெங்கும் பாடும் குயில் மொழி!

அச்சமில்லை என்றே முழங்கினான் அவன்;
         ஆணுக்கு சமானம் புதுமைப் பெண் என்றான் ;
இச்சகத்து உளோரெல்லாம் எதிர்த்து நின்றிடினும்,
         இனியொரு விதிசெய்வோம் தனியே என்றான்!

காவெனக் கத்திடும் காக்கையை அழைப்பான்;
           கானக அரசன் சிங்கமாய் கர்ஜிப்பான்;
பாரினில்  ஒருவனுக்கு உணவில்லை என்றால்
            பாரையே அழித்திட தீயாய் துடிப்பான்!

அவனில் ஞானபுத்தனைக் காணலாம்;
         அவரின் போதி தத்துவம் அறியலாம்!
அவனியைக் காக்கும் கண்ணனை ரசிக்கலாம்;
          ஆழ்ந்தவர் பக்திபரவசத்தை ருசிக்கலாம்!


         
         

No comments:

Post a Comment

Passenger vehicles sales trend is encouraging for the Economy

  The Federation of Automobile Dealers Associations (FADA) released its vehicle retail data for March 2025 and the full fiscal year 2024-25 ...