துளித்துளியாய் வீழ்கின்ற வேகம்,
களியின்பம் ஊட்டுகின்ற ராகம்!
வெட்டுகின்ற ஒளிக்கீற்று பறக்க,
கொட்டுகின்ற மழைநீரும் ஒலிக்க,
விண்ணுலக மடைதிறந்து பொழிந்து,
மண்ணுலகப் பச்சையுடன் கலந்து,
ஏங்குகின்ற பயிரனைத்தும் அணைத்து,
தாங்குகின்ற காட்சிதனைப் பார்த்தால்,
அழுகின்ற குழந்தையின் பசியாற்ற
சுரக்கின்ற தாய்ப்பால் போலத்தானோ!!
களியின்பம் ஊட்டுகின்ற ராகம்!
வெட்டுகின்ற ஒளிக்கீற்று பறக்க,
கொட்டுகின்ற மழைநீரும் ஒலிக்க,
விண்ணுலக மடைதிறந்து பொழிந்து,
மண்ணுலகப் பச்சையுடன் கலந்து,
ஏங்குகின்ற பயிரனைத்தும் அணைத்து,
தாங்குகின்ற காட்சிதனைப் பார்த்தால்,
அழுகின்ற குழந்தையின் பசியாற்ற
சுரக்கின்ற தாய்ப்பால் போலத்தானோ!!
No comments:
Post a Comment