நல்லதொரு பெண்ணே!
உன் மேலுடையின்
பொலிவு மட்டுமே
உன்னை அழகுபடுத்தவில்லை!
உன் உள் பக்கங்களை
படிக்க படிக்க
அர்த்தமுள்ளதாகக்
காண்கிறேன்!
உன்னை ஒவ்வொருமுறை
படிக்கும்போதும்
புத்தம்புதிய
பதவுரைகளை
என் உள்ளத்தில்
முத்தமிட்டு
பதிய வைக்கிறாய்!
உன்னைக் கைப்பிடித்த
நாள் முதலாய்
வற்றாத ஊற்றாய்
நீ
பலவிதப் பார்வையில்
ஆயிரம் அர்த்தங்களை
அள்ளித் தெளிக்கிறாய்!
உனக்கு
என்மேல்
அவ்வளவு அன்பா?!
உன் மேலுடையின்
பொலிவு மட்டுமே
உன்னை அழகுபடுத்தவில்லை!
உன் உள் பக்கங்களை
படிக்க படிக்க
அர்த்தமுள்ளதாகக்
காண்கிறேன்!
உன்னை ஒவ்வொருமுறை
படிக்கும்போதும்
புத்தம்புதிய
பதவுரைகளை
என் உள்ளத்தில்
முத்தமிட்டு
பதிய வைக்கிறாய்!
உன்னைக் கைப்பிடித்த
நாள் முதலாய்
வற்றாத ஊற்றாய்
நீ
பலவிதப் பார்வையில்
ஆயிரம் அர்த்தங்களை
அள்ளித் தெளிக்கிறாய்!
உனக்கு
என்மேல்
அவ்வளவு அன்பா?!
No comments:
Post a Comment