காந்திஜிக்கு சமர்ப்பணம்
எங்கனையோ மூலையில சின்னவலி
எங்கிட்டு வந்தது இந்தயிடி?
கீளவிழ அடித்த அந்தக்கோளைகள்
கீறிவிட்ட மனசில இந்தவலியோ?
கூறுகெட்ட மனுசங்க எந்நெஞ்சை
கூறுபோட நினைச்சாத்தான் முடியுமா ?
பாதையில கல்லுமுள்ளு போட்டாநானு
பாதைக்கு பயந்து ஓடுவனா?
கைவிளக்கை ஒடச்சி எறிஞ்சிட்டா
பைய எம் மனசும் இருளுமா ?
அடக்கி முடக்கி உதைச்சா
அடங்கிப் போயி அழுவனா?
குரல்வளைய மிதிச்சாநானு
குரலெழுப்ப மறப்பனா?
கால முறிச்சி போட்டாநானு
கோல ஊனி போகமாட்டன் ?
என்னயவிட எங்குருதிய விட
நான் போகும் பாட்டை பெரிசுல்ல ?
when the whole world is raising slogans on BLM( Black Lives Matter) , I rededicate my above poem once again to the ideals of Gandhiji who famously said "Means justify the Ends".Difficult for us to digest this and follow in our lives, it is based on the universal rule of Dharma.According to him All Lives Matter!!
No comments:
Post a Comment